ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் செல்ல ஒரு அடி உயரம் கொண்ட தடுப்பு சுவர்

புதன்கிழமை, 29 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
hsr

யானைகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வகையில் ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு வேலிகளை அகற்றி யானைகள் தாண்டி செல்லும் அளவிற்கு சிமெண்ட்டிலான தடுக்கு அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா வனப்பகுதியில் இருந்து 200 க்கும் மேற்பட்ட யானைகள் அஞ்செட்டி, ஜவளகிரி, ஊடேதுர்க்கம், சானமாவு, கோபசந்திரம், பேரிகை, வழியாக கோலார் சித்தூர் வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதிக்கு சென்று வருவது வழக்கம்.கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உணவுக்காக 6 மாதங்கள் கர்நாடக மாநிலத்தில் தங்கி இருக்கும் இந்த யானைகள் கூட்டம் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில வன எல்லையில் சுற்றி ராகி உள்ளிட்ட விவசாயப் பயிர்களை சாப்பிட்டு இனவிருத்தி அடைந்து யானைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வந்தன.கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையி?ல் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைவு, இருவழி நெடுஞ்சாலையாக இருந்ததால் யானைகள் அந்தச் சாலையை எளிதில் கடந்து சென்று வந்தன. தற்பொழுது இந்த நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை பன்படங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச்சாலையாகவும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 6 வழிச்சாலையாகவும் அமைக்கப்பட்டு நொடிக்கு நொடி வாகனங்கள் சென்று வருகின்றன.இதனால் யானைகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து அஞ்செட்டி வழியாக சானமாவு காடு, கோபசந்திரம் வரை யானைகள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது சாலை விபத்தில் இறந்து விடுகின்றன. கோபசந்திரம் கிராமத்தில் 5 யானைகள் சாலையை கடக்க முயன்ற போது ஒரு பெண் யானை கார் மோதி உயிரிழந்தது. இந்த யானையை விட்டுச் செல்லாமல் மற்ற யானைகள் தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே இரவு முழுவதும் காத்திருந்தன. அந்த யானைகள் வனத்துறையினர் விரட்ட முடியாமல் அவதியுற்றனர். அந்த யானைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் யானை இறந்த தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து பார்த்துவிட்டு பகல் நேரங்களில் வனப்பகுதியில் சென்று வந்தன. யானைகள் வாகனங்களின் பிரச்சனையின்றி சென்று வர இயற்கை மேம்பாலம் அமைத்திட வேண்டும். என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் இந்த வனபகுதியில் யானைகள் மட்டுமின்றி சிறுத்தைப்புலி,கரடி,மான்,மயில், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளும் அதிக அளவில் உள்ளன. இந்த வன விலங்குகள் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் விபத்தில் சிக்காமல் இருக்க உயரமான கம்பியிலான தடுப்பு சுவர் மற்றும் உயரமான செடிகள் இருந்தது. அதை அகற்றி விட்டு தற்போது யானைகள் தாண்டும் வகையில் சிமெண்ட்டிலான தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவர் ஒரு அடி வரை இருக்கும். இதனால் யானைகள் தங்கு தடையின்றி யனைகள் தாண்டி செல்ல முடிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: