முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தில் மனநலம் குறித்த சர்வதேச மாநாடு

புதன்கிழமை, 29 மார்ச் 2017      கோவை
Image Unavailable

உலகளாவிய மனநலம் குறித்து அமிர்தா பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் பயிலரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிபுணர்கள் இந்நாட்டில் மனநல பாதிப்பு என்ற மிகப்பெரிய சுமைக்கு பங்களிப்பு செய்யும் ஒரு பிரதான காரணியாக மனநல பாதிப்பு குறித்து நிலவும் களங்கம் மற்றும் அவப்பெயரே இருக்கிறது என்றனர்.

உலகளாவிய மனநலத்தைப் பேணி வளர்ப்பது மீதான இந்த பன்னாட்டு கருத்தரங்கமானது அம்ரிதா பல்கலைக்கழகத்தின் சமூகப்பணி துறை மற்றும் நியூ யார்க் நகரின் பஃபல்லோ பல்கலைக்கழகத்தின் சமூகப்பணி பள்ளி ஆகிய இரு அமைப்புகளாலும் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இதில் இந்தியா மற்றும் யுஎஸ்-ஐ சேர்ந்த 12க்கும் அதிகமான நிபுணர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அம்ரிதா பல்கலைக்கழகத்தின் சமூகப்பணி துறையின் தலைவர் சுஜா, இந்தியாவின் மனநல சீர்கேடுகளின் நிலை குறித்து பேசுகையில், “மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலை காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் ஆகியோர் மனநல சீர்கேடுகள் பாதிப்புக்கு அதிகமாக உள்ளாகும் நிலையில் உள்ளனர். கருவுற்ற பெண்கள் மத்தியிலும் மற்றும் சமீபத்தில் பிரசவமாகியிருக்கிற பெண்கள் மத்தியிலும் ஆழ்ந்த உளர்ச்சோர்வு பொதுவாக காணப்படுகிறது. முதியோர்கள் மத்தியில் மறதிநோய் மற்றும் உளத்தளர்ச்சி அதிகமாக ஏற்படுகிறது. மனச்சிதைவுநோய், மனநிலை கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் தொடர்புடைய பிரச்சனைகள் கிராமப்பகுதிகளைவிட நகரங்களில் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதும் அறியப்பட்டுள்ளது. மொத்தத்தில் மனநல பாதிப்புநோய் பெண்களைவிட ஆண்களிடம் இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. எனினும், மனநல கோளாறுகள், மனக்கலக்க நோய்கள் மற்றும் பெருவிருப்ப கட்டாய நடத்தைகள் போன்றவை ஆண்களைவிட பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது,” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்