முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக வேளாண்சந்தை செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பயன் பெற வேண்டும் : கலெக்டர் கணேஷ் தகவல்

புதன்கிழமை, 29 மார்ச் 2017      புதுக்கோட்டை
Image Unavailable

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மைத்துறையின் வாயிலாக தேசிய தகவல் மையம் மற்றும் மவுன் சீயோன் கல்லூரி மாணவர்களின் பங்கேற்புடன் மாவட்டத்திலுள்ள வேளாண் தொழில் நுட்ப பரவலாக்கம் மற்றும் முக்கிய வேளாண் பயிர்களின் விளை பொருட்களுக்கான சந்தை விலை விபரங்களை தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆன்டராய்டு செயலியினை விவசாயிகளுக்கு பதிவேற்றம் செய்யும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சு. கணேஷ், தலைமையில் நேற்று (28.03.2017) நடைபெற்றது.

 

கல்லுாரி மாணவர்கள்

 

இந்நிகழ்ச்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேளாண்மை தொழில்நுட்பம் மற்றும் சந்தைவிபரம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆன்டராய்டு செயலியினை மாவட்ட கலெக்டர் விவசாயிகளின் கைபேசிகளுக்கு பதிவிறக்கம் செய்து கூறியதாவது.

 

நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறையின் வாயிலாக தேசிய தகவல் மையம் மற்றும் மவுன் சீயோன் கல்லூரி மாணவர்களின் பங்கேற்புடன் மாவட்டத்திலுள்ள வேளாண் தொழில் நுட்ப பரவலாக்கம் மற்றும் முக்கிய வேளாண் பயிர்களின் விளை பொருட்களுக்கான சந்தை விலை விபரங்களை தெரிந்துகொள்ளும் வகையில் புதிய ஆன்டராய்டு செயலி உருவாக்கப்பட்டடுள்ளது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியரகத்தில் இந்த ஆன்டராய்டு செயிலியின் முதல் தகவல் முன்னோடி விவசாயி ஜி.எஸ்.தனபதி, அப்பாவுபாலாண்டார், எஸ்.என்.காமராஜ், கலியபெருமாள், முருகேசன் மற்றும் பங்கேற்ற விவசாயிகளின் கைபேசிக்கு அனுப்பி பெறப்பட்டது.

 

இச்செயலியினை விவசாயிகள் தங்களது கைபேசியில் உள்ளீடு செய்து கொள்வது மூலம் பருவத்திற்கு உகந்த தொழில்நுட்பங்கள், வேளாண்தொடர்பு துறைகளின் வாயிலாக மாவட்டத்தில் நடைபெறும் விவசாயம் சார்ந்த பயிற்சிகள் மற்றும் கூட்டங்கள், மாவட்டத்தில் உள்ள பயிர்களான நெல் மற்றும் சிறுதானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள், தேங்காய் மற்றும் வாழைப்பழவகைகள் ஆகியவைகளின் வட்டார வாரியான சந்தை விலை விபரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேளாண்மை சந்தை செயலியினை மாவட்ட இணையதளத்தில் (றறற.pரனரமமழவவயi.niஉ.in) அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், கூறினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, வேளாண்மை இணை இயக்குநர் நா.அண்ணாமலை , துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குநர் அருணாசலம் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்