முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாதர்பாக்கத்தில் பேரணி

புதன்கிழமை, 29 மார்ச் 2017      சென்னை
Image Unavailable

தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தரும் விதமாகவும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் சென்னை சமூக சேவை சங்கத்தின் மூலம் பேரணி நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஆதரவு
தமிழக விவசாயிகளின் இன்னல்கள் தீர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பேரிடர் பாதுகாப்பு உதயம் திட்டம் என்று பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு பிளாஸ்டிக் பொருட்கள் வருங்கால பேரிடர் என்று துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விதமாகவும், தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது மத்திய அரசின் பாதுகாப்பை வலியுறுத்தியும் சென்னை சமூக சேவை சங்கம் இந்த பேரணியை நடத்தியது.
இந்த பேரணிக்கு சென்னை சமூக சேவை சங்க இயக்குனர் பேட்ரிக் ஐ ஜோசப் தலைமை தாங்கினார். ரோஷா நகரம் மாதா கோவில் அருள்தந்தை பாப்பையா, மாதர்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஜோயல் ஆசிர்வாதம், துணை மேலாளர் அனில் பாபு முன்னிலை வகித்தனர்.
மாதர்பாக்கம் பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த பேரணியில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய பெண்கள் கூட்டமைப்பின் சார்பாக 23 கிராமங்களில் இருந்து 1000 பெண்களும், 300 பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். பேரணியானது பாதிரிவேடு இந்கியன் ஓவர்சீஸ் வங்கி வரை சுமார் 4 கி.மீ தூரம் நடைபெற்றது. பேரணியில் கலந்துக் கொண்டவர்கள் விவசாயிகளை ஆதரித்தும், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரியும் கோஷங்கள் எழுப்பியதோடு, பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பேரணிக்கான ஏற்பாடுகளை பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பரத், கவிதா, ஷோபா, சங்கீதா ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்