கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம்

புதன்கிழமை, 29 மார்ச் 2017      கடலூர்
one day camp for pc 2017 03 29

கடலூர்,சிதம்பரம்,விருத்தாசலம்,நெய்வேலி,சேத்தியாதோப்பு,பண்ருட்டி,திட்டக்குடி ஆகிய உட்கோட்டகளில் உள்ள காவல் நிலையங்களில் காவல் நண்பர்கள் 150 பேர் பணிபுரிகின்றனர்.இந்த 7 கோட்டங்களில் பணிபுரியும் காவல் நண்பர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் கடலூரில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைப்பெற்றது.இப்பயிற்சி முகாமில் காவல் நண்பர்கள் காவல் துறையினருக்கு ஒரு குற்றம் நடைப்பெறும் நிலையில் எவ்வாறு தகவல்,அக்குற்றத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் குற்றவாளிகளை தண்டிக்கும் உரிமைகள் காவல் துறையினருக்கு மட்டுமே உள்ளது என்பது உள்ளீட்ட பல்வேறு கருத்துகளை கல்லூரி பேராசிரியர்களை கொண்டு காவல் நண்பர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இம்முகாமில் 7 கோட்டங்களில் பணிபுரியும் காவல் 150 நண்பர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சீருடைகளையும்,வீசிலையும் வழங்கினார்.இப்பயிற்சியில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் சாந்தனராஜ்,அண்ணாம்மாள்,மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மதிவாணன்,வேதரத்தினம்,கடலூர் துணை கண்காணிப்பாளர்கள் நரசிம்மன், சமூகநீதி துணை கண்காணிப்பாளர் கணேசன், மாவட்ட குற்றபிரிவு துணை கண்காணிப்பாளர் சிட்டிபாபு, மாவட்ட குற்ற ஆவணபிரிவு துணை கண்காணிப்பாளர் ஷாகுல் அமீது மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட காவலர்கள் கலந்து கொண்டனர்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: