முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகாதாரமற்ற கழிவறை, பாதாளச்சாக்கடைகளில் இறங்கி பணி செய்வதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான கருத்தரங்கம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 29 மார்ச் 2017      கடலூர்

கடலூர் மாவட்ட ஆட்சியரக பொதுமக்கள் குறைதீர் அரங்கத்தில் சுகாதாரமற்ற கழிவறை, நச்சுத்தொட்டிகள் மற்றும் பாதாளச்சாக்கடைகளில் இறங்கி பணி செய்வதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான கருத்தரங்கம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் கலெக்டர் , கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சேகரிப்பு தொட்டியில் 20.03.2017 அன்று இறங்கி அடைப்பை சரிசெய்யும் போது 3 நபர்கள் உயிரிழந்த துயர சம்பவம் நடந்தது. இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் நிகழ்வதை தவிர்ப்பதற்காக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அனைத்து அலுவலர்களும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். கடலூர் மாவட்டம் முழுவதும் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது சட்டத்தினால் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பணியாளர்களை ஈடுபடுத்தி இப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். துப்புரவு பணியை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கையுறை, முகக்கவசம், காலணிகள் போன்றவற்றை பயன்படுத்தி துப்புரவு பணிகளை மேற்கொள்ள அவர்களிடம் அலுவலர்கள் அறிவுறுத்தவேண்டும். என அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணி சட்டத்தின்படியும், உச்சநீதிமன்ற அறிவுரையின்படியும் கடலூர் மாவட்டத்தில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளளது எனவும், இதனை மீறுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் வழக்குகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், துப்புரவு பணிகள் மேற்கொள்ளும்போது பாதுகாப்பு உபகரணங்கள், கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பயன்படுத்தியும், அலுவலர்கள் மேற்பார்வையிலும் பணிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும், மது அருந்திய பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் தெரிவித்தார்.உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஜோஸ் மற்றும் லூசி ஆகியோர் சட்டத்திலுள்ள வழிகாட்டுதல்களை தெரிவித்து, கடலூர் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சம் வழங்க துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தனர். இக்கருத்தரங்கில் மாவட்ட வருவாய் கோ.விஜயா நன்றியுரையாற்றினார். இக்கருத்தரங்கில் கடலூர் நகராட்சி ஆணையர் விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.சண்முகம், மாவட்ட ஆட்சியதின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரவிச்சந்திரன், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஜீஜாபாய், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் ஒப்பந்ததாரர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்