முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் ஆடு, மாடு வெட்ட தடை எதிரொலி: டெல்லியில் உச்சத்தை தொட்ட இறைச்சி விலை !

புதன்கிழமை, 29 மார்ச் 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - உத்தரபிரதேசத்தில் புதிய முதல்வர் பதவி ஏற்ற யோகி ஆதித்ய நாத், மாடுகளை வெட்ட தடை விதித்ததையொட்டி டெல்லியில் இறைச்சி விலை அதிகரித்துள்ளது.

மூட உத்தரவு
உத்தரபிரதேசத்தில் புதிய முதல்வர் பதவி ஏற்ற யோகி ஆதித்ய நாத், மாடுகளை வெட்ட தடை விதித்தார். மேலும் அனுமதி இல்லாத ஆடு, மாடு வெட்டும் கூடங்கள், இறைச்சி கடைகள் ஆகியவற்றையும் மூட உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இறைச்சி வியாபாரிகளும், அசைவ ஓட்டல்களும் காலைவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.

இறைச்சி வரத்து நிறுத்தம்
இந்திய தலைநகரமான டெல்லிக்கு பக்கத்து மாநிலங்களான உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்துதான் இறைச்சிகள் வருவது வழக்கம். டெல்லி நகரம் உத்தரபிரதேசத்தை ஒட்டி இருப்பதால் அங்கிருந்து தான் அதிக அளவில் இறைச்சி வரும். உத்தரபிரதேசத்தில் தற்போது வேலை நிறுத்தம் நடப்பதாலும், பெரும்பாலான இறைச்சி கூடங்கள் மூடப்பட்டு விட்டதாலும் அங்கிருந்து இறைச்சி வருவது நின்று விட்டது.

இறைச்சி விலை உயர்வு
டெல்லியில் உள்ள காசிப்பூர் மார்க்கெட்டுக்கு தினமும் 20 லோடு இறைச்சி வருவது உண்டு. அவையும் நின்று விட்டன. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் இறைச்சிகள் டெல்லி தேவைக்கு போதுமானதாக இல்லை. டெல்லியில் தினமும் 40 ஆயிரம் கிலோ எருமை மாட்டு இறைச்சியும், 80 ஆயிரம் கிலோ ஆட்டு இறைச்சியும் விற்பனை ஆகும். அந்த அளவுக்கு இறைச்சிவரத்து இல்லாததால் இதன் விலையும் கிடுகிடு என உயர்ந்து விட்டது. ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.40-ல் இருந்து ரூ.60 வரை உயர்ந்துள்ளது.

கடுமையாக பாதிப்பு
ரூ.380-ல் இருந்து ரூ.400 வரை விற்கப்பட்ட ஆட்டு இறைச்சி தற்போது ரூ.500 வரை உயர்ந்து விட்டது. எருமை மாட்டு இறைச்சி ரூ.170-ல் இருந்து ரூ.200 ஆக உயர்ந்து இருக்கிறது. இறைச்சி விலை திடீர் உயர்வால் டெல்லி அசைவ பிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இறைச்சி கடைக்காரர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் சுகாதார அமைச்சர் சித்தார்த்த நாத்தை சந்தித்து பேசினார்கள். ஆனால், அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. எனவே, வேலை நிறுத்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago