முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரடிக்கல் ஜல்லிக்கட்டு விழாவிற்கு காளைகள் முன்பதிவு தொடங்கியது

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.- திருமங்கலம் தாலுகா கரடிக்கல் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 2ம்தேதி நடைபெறவுள்ள 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகளை பதிவு செய்திடும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.அப்போது நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது காளைகளை பதிவுசெய்து மகிழச்சியுடன் சென்றனர்.

மதுரை மாவட்டம்,திருமங்கலம் தாலுகாவில் உள்ள கரடிக்கல் கிராமத்திலுள்ள ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 2-ம் தேதி 278-வது ஆண்டு உலகப்புகழ் பெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது.இதற்காக தற்போது கரடிக்கல் கிராமத்தில் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கரடிக்கல் நான்கு பங்காளிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் கோலாகலமாக செய்து வருகின்றனர்.ஜல்லிக்கட்;டு நடத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகள்  அனைத்தும் மின்னல் வேகத்தில் தற்போது விழா கமிட்டியினரால் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரடிக்கல் கிராமம் அருள்மிகு ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 2ம்தேதி 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்காக தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் கரடிக்கல் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள் ஆண்டிச்சாமி,மொக்கராஜ்,ஆண்டிச்சாமி,மணிமுத்து ஆகியோருடன் கிராமமக்களும் இணைந்து சிறப்புடன் செய்து வருகின்றனர்.

இதனிடையே ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளும் காளைகளின் பதிவு நேற்று காலை கரடிக்கல் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சிறப்பாக தொடங்கியது. 30ம் தேதி தொடங்கி 1ம் தேதி வரை நடைபெறுவதாக இருக்கும் காளைகள் பதிவின் முதல் நாளான நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான காளைகளின் உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது காளைகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக பதிவுசெய்து மகிழ்வுடன் திரும்பிச் சென்றனர்.இந்த பதிவின் போது கால்நடை மருத்துவக் குழுவினர்,வருவாய் ஆய்வாளர் ரகுபதி,கிராம நிர்வாக அலுவலர் காசிராஜன் மற்றும் அலுவலர்களும் காளைகளை பதிவு செய்து அதற்கான டோக்கன்களை வழங்கினார்கள். அப்போது ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள் ஆண்டிச்சாமி,மொக்கராஜ்,ஆண்டிச்சாமி, மணிமுத்து உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.அதே சமயம் காளைகள் பதிவு செய்வதற்கு கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் ஆஸ்டின்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்