நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      நாமக்கல்
3

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (30.03.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது,நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. நடப்பு வருடம் இதுவரை 25.75 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. தற்பொழுது வரை நெல் 2186 ஹெக்டர், பயறு வகைகள் 11652 ஹெக்டர். சிறுதானியங்கள் 54383 ஹெக்டர், எண்ணெய் வித்துக்கள் 29351 ஹெக்டர், பருத்தி 2286 ஹெக்டர், கரும்பு 11585 ஹெக்டர் என மொத்தம் 111443 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எருமப்பட்டி, மோகனூர் வட்டாரங்களில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகின்றது. 2016 ஆம் ஆண்டு 337.26 மிமீ மட்டுமே மழையளவு பெறப்பட்டுள்ளது. குறைந்த மழையளவு பெறப்பட்ட காரணத்தினால் அனைத்து வட்டாரங்களும் வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிணற்றிலும் நீரின் அளவு குறைவாக உள்ளது.மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேவைக்கு ஏற்ப விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் இதர இன விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நுண்ணீர்ப் பாசன திட்டத்தின் (Pஆமுளுலு);;, கீழ் 2016-17ம்ஆண்டிற்கு 1885.41 எக்டர் பொருள் இலக்காகவும், 1296.49 இலட்சம் நிதி இலக்காகவும் பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நுண்ணீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்திற்கு 2014-15ஆம் நிதியாண்டில் ஆதி திராவிடர் இனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கில் 160.839 இலட்சமும் 2015-16ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி இலக்கில் 210.989 இலட்சமும் சாதனை அடையப்படாமல் உள்ளது. ஆகவே சொட்டுநீர் பாசனம் அமைக்க விருப்பமுள்ள ஆதிதிராவிடர் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களிலும், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக நடப்பாண்டில் 11வட்டாரங்களில் இப்பணிகளைச் செய்ய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, ரூ.110 இலட்சம் அரசு மானியத்தில் 11 வட்டாரங்களில் வேளாண்மை இயந்திரங்கள் வாடகை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்திற்கு டிராக்டர், சுழற்கலப்பைகள், 5 கொழுகலப்பைகள், 9 கொழுகலப்பைகள், பண்ணை கழிவுகளை துகளாக்கும் கருவி, வைக்கோல் கட்டுகட்டும் கருவி, சிறியரக டிராக்டர், பல்வகை கதிரடிக்கும் கருவிகள், தெளிப்பான்கள் தட்டு நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இம்மையங்களைப் பயன்படுத்தி குறைந்த வாடகையில் இயந்திரங்களை விவசாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் பேசினார் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கலியராஜ், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் சு.இராமதாஸ், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்;வை பொறியாளர் சந்தானம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாத பிரகாசம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் எஸ்.கண்ணன், உட்பட அரசு துறை அலுவலர்கள், விவசாயிகள், பல்வேறு விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: