முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்டத்தில் 3000 லாரிகள் இயக்கப்பட வில்லை _ வர்த்தகம் பாதிப்பு

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் 3000 லாரிகள் இயக்கப்படவில்லை.

இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய தென் மாநில லாரி உரிமையாளர்கள் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் நாளான நேற்று 3000 லாரிகள் இயக்கப்பட வில்லை. அவை அனைத்தும் லாரி பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அட்வான்ஸ் புக்கிங் கடந்த 27ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்து.

திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிகம் வர்த்தகம் நடைபெறும் பகுதி ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் ஆகும். இங்கு தினசரி நூற்றுக்கணக்கான வெளியூர் மற்றும் வெளிமாநில லாரிகள் காய்கறிகள் இறக்குவதற்கும், வெளியூர்களுக்கு காய்கறிகளை கொண்டு செல்வதற்கும் வந்து செல்லும். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நேற்று மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. லாரிகள் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் பட்சத்தில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்