இ-சேவை மைய கணினி இயக்குபவர்களுக்கு பயிற்சி: கலெக்டர் சம்பத், தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      சேலம்
1

 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள இ-சேவை மைய கணினி இயக்குபவர்களுக்கு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தல் குறித்த பயிற்சி நேற்று (30.03.2017) வழங்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் வா.சம்பத், தெரிவித்ததாவது:சேலம் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம் 2013 நவம்பர் 1 2016 முதல் அமல்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 9,75,382 குடும்ப அட்டைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. இம் மாவட்டத்தில் மொத்தம் 1541 முழுநேர மற்றும் பகுதி நேர நியாய விலைக்கடைகள் இயங்கி வருகிறது. நியாயவிலைக்கடை பணியாளர்களால் 8,90,433 குடும்ப அட்டைகளுக்கு (96ரூ) ஆதார் எண் மற்றும் செல்பேசி எண் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குடும்ப அட்டையில் பெயர் பதிவு உள்ள நபர்கள் அனைவருக்கும் ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் அச்சிட்டு வரப்பெற்ற புதிய ஸ்மார்ட் கார்டுகளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தல் ஆகிய பணிகளுக்காக பொதுமக்கள் வnயீனள.படிஎ.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப்படுள்ளது. இம்முறையிலான கோரிக்கைகளை பொதுமக்கள் அந்தந்த வட்ட அலுவலகத்திலுள்ள ஊளுஊ ஊநுசூகூசுநு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களால் செயல்பட்டு வரும் அரசு ந சேவை மையங்கள் மற்றும் ஏனைய இ-சேவை மையங்கள் போன்ற கணினி சேவை மையங்களை பயன்படுத்திகொள்ளலாம். இது தொடர்பாக இ சேவை மைய கணினி இயக்குபவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இணைய தளத்தில் எவ்வாறு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை கோரி எவ்வாறு விண்ணப்பிப்பது என மாவட்ட அளவில் பயிற்சி வழங்கப்படுகிறது. எனவே இப்பயிற்சியினை சேலம் மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மைய கணினி இயக்குபவர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என கலெக்டர் வா.சம்பத், தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை இணை பதிவாளர் ராஜேந்திரபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மதுரைமுருகன் அவர்கள், இ-சேவை மைய கணினி இயக்குபவர்கள், வட்ட வழங்கள் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: