கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான மேசை பந்து விளையாட்டு போட்டி: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
2

கிருஷ்ணகிரி மாவட்டம் விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2016-2017-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான அரசுப்பணியாளர்களுக்கான மேசைப்பந்து விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள்; 30.03.2017 மற்றும் 31.03.2017 - ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்துகொள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏற்கனவே நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள மேசைப்பந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இப்போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுவதால், இப்போட்டிகளில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 300 அரசுப்பணியாளர்கள் வருகை தந்துள்ளனர். போட்டியின் துவக்க நாளான நேற்று (30.03.2017) காலை 11.00 மணிக்கு கலெக்டர் சி.கதிரவன் மாநில அளவிலான மேசைப்பந்து போட்டியினை துவக்கி வைத்து, வீரர், வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இவ்விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.சிவரஞ்சன், தமிழ்நாடு விளையாட்டு N;மம்பாட்டு ஆணைய பயிற்றுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: