முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல் கால்நடை பராமரிப்பு பண்ணையில் அசோலா விதைகள் வளர்ப்பு முறையை மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர். தொடங்கி வைத்தார்.

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      ஈரோடு
Image Unavailable

     நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல் கால்நடை பராமரிப்பு பண்ணையில் இன்று அசோலா விதைகள் வளர்ப்பு முறையை மாவட்ட கலெக்டர்  தொடங்கி வைத்து கூறியதாவது,

     இந்த அசோலா விதைகள் வளர்ப்பதனால் கால்நடைகளுக்கு தீவனமாகவும், அடர் தீவனமாகவும் பயன்படுத்தலாம். இதில் புரதசத்து உள்ள காரணத்தால் கால்நடைகளுக்கு கொடுக்கப்படுவதால் பால் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் கோழிகளுக்கும் தீவனமாக பயன்படுத்தலாம்.

          மேலும் இந்த பண்ணையில் புரதசத்து நிறைந்துள்ள தீவன ஓட்ஸ் மற்றும் அகத்தி நாற்றுகள், மரலூகான் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்.

          இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.ரங்கசாமி, துணை இயக்குநர் மரு.பழனிச்சாமி மற்றும் அரசுத்துறை  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்