முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலத்தையொட்டி

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      ஈரோடு

பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலத்தையொட்டி நாளை  (சனிக்கிழமை) ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஈரோடு நகர போக்குவரத்து போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) விஜயகுமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது–

கம்பம் ஊர்வலம்

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்கள் திருவிழா நாளை  (சனிக்கிழமை) கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீர் விழாவுடன் நிறைவடைகிறது. விழாவையொட்டி கம்பம் ஊர்வலம் நடக்கிறது.பிரப் ரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து கம்பம் புறப்பட்டு பன்னீர் செல்வம் பூங்கா வழியாக மணிக்கூண்டு வந்து சேருகிறது. இங்கு சின்னமாரியம்மன் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் கம்பங்களும் வந்து சேரும். அங்கிருந்து 3 கம்பங்களும் ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, பிரப் ரோடு, எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா, மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர், சத்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, மணிக்கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம் மண்டபம் வீதி, கச்சேரி வீதி, டவுன் போலீஸ் நிலையம், அக்ரகாரம் வீதி வழியாக காரைவாய்க்காலில்(காலிங்கராயன் வாய்க்கால்) கம்பங்கள் விடப்படுகின்றன. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஊர்வலம் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் சென்று வருவதால் ஊர்வலம் செல்லும் ரோடுகளில் பொதுமக்கள் யாரும் வாகனங்கள் ஓட்டிவர வேண்டாம்.

போக்குவரத்து மாற்றம்

மேலும் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 9 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் பகுதிகளில் இருந்து பள்ளிபாளையம் வழியாக ஈரோடு வரும் பஸ்கள் காவேரி ரோடு, கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை வழியாக திருநகர் காலனி வந்து வ.உ.சி. பூங்கா பின்புறம் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, காவேரி ரோடு வழியாக திரும்பி செல்ல வேண்டும்.கோபி சத்தி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் லோட்டஸ் ஷோரூம் அருகில் பயணிகளை இறக்கி விட்டு வீரபத்திரா 2–வது வீதி வழியாக (வ.உ.சி.பூங்கா தெற்கு வாயில் வழியாக) திரும்பி வீரபத்திரா முதல் வீதி வழியாக சத்தி ரோட்டை அடைய வேண்டும். பவானி, அந்தியூர் பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் பவானி ரோட்டில் உள்ள லாரி அசோசியேசன் பெட்ரோல் பங்க் அருகில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, திரும்ப செல்ல வேண்டும்.

ரவுண்டானா

திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் இருந்து ஈரோடு வழியாக கோவை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் காவேரி ரோடு, திருநகர் காலனி, வீரபத்திரா வீதி, வீரப்பன்சத்திரம், கனிராவுத்தர் குளம் வழியாக சித்தோடு செல்ல வேண்டும்.கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்து பெருந்துறை வழியாக வரும் பஸ்கள் பெருந்துறை ரோடு எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவில் இருந்து வலது புறமாக திரும்பி, அரசு ஆஸ்பத்திரி அருகில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பழனியப்பா வீதி, ராமசாமி வீதி, புளூ டார்ட் வழியாக பெருந்துறை செல்ல வேண்டும்.

கனரக வாகனங்கள்

தாராபுரம், காங்கேயம், கொடுமுடி, கரூர், திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் காளை மாடு சிலையில் இருந்து ரெயில் நிலையம், ஈ.வி.என். ரோடு வழியாக பெரியார் நகர் மேற்கு நுழைவுவாயிலில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பெரியார் நகர் கிழக்கு நுழைவு வாயில் (காந்திஜி ரோடு) சென்று மீண்டும் காளைமாடு சிலை வழியாக செல்ல வேண்டும்.கோவையில் இருந்து ஈரோடு வழியாக திருச்செங்கோடு, சேலம், நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள் பெருந்துறை ரோடு வீரப்பன்பாளையம் பிரிவு வழியாக (நசியனூர் ரோடு) வில்லரசம்பட்டி நால்ரோடு சென்று அங்கிருந்து கனிராவுத்தர் குளம், வீரப்பன்சத்திரம், 16–ம் எண் மெயின் ரோடு வழியாக பள்ளிப்பாளையம் செல்ல வேண்டும்.இதுபோல் அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் கம்பம் வரும் வழிகளை தவிர்த்து மாற்று சாலைகளை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் ஈரோடு டவுன் போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) விஜயகுமார் கூறி உள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்