நாமக்கல் மாவட்டத்தில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.80 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள்:கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      நாமக்கல்
1

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (31.03.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.60,000 வீதம் ரூ.7,80,000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: