முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் வருகிற 2 மற்றும் 30ம் தேதிகளில் 70,527 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது : கலெக்டர் சரவணவேல்ராஜ் தகவல்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், இளம்பிள்ளை வாத நோய் முற்றிலும் ஒழிக்க "போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்" நடத்துதல் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் நேற்று (31.03.2017) நடைபெற்றது.

 

போலியோ சொட்டு மருந்து

 

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது :-

அரியலூர் மாவட்டத்தில் 02.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய நாட்கள் இரண்டு தவணையாக ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட 70,527 குழந்தைகள் பயன்பெற இருக்கிறார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க 544 மையங்கள் செயல்படவுள்ளன. நடமாடும் குழு, பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம் மற்றும் முக்கிய பொது இடங்ககளிலும், மேலும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து சிமெண்ட் தொழிற்சாலைகள் பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்கள்pன் ஐந்து வயதிற்கு உட்பட்ட 549 குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தியும், அதன் மூலமும் அனைத்து ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 2088 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இப்பணிகளுக்கு 50 அரசு துறை வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

இம்முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள் பெறப்பட்டு, குளிர்சாதன வசதிகளுடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது.

எனவே, அனைத்து 5-வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாட்களான 02.04.2017 மற்றும் 30.04.2017 அன்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஸ்வரி, இணை இயக்குநர் மரு.வானொலி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.சோமசுந்தரம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் பழனிசாமி, மருத்துவர்கள், வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்