முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணையதள வணிகத்தை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு: கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் ஊரிஸ் கல்லூரியில் தமிழ்நாடு அரசு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு (பெட்காட்) இணைந்து நடத்திய இணையதள வர்த்தகம் தொடர்பான விழிபுணர்வு கருத்தரங்கிணை கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்து பேசியதாவது. இணையதள வர்த்தகம் என்பது இன்றைய நவீன காலத்தில் இருப்பிடத்தில் இருந்தே பொருட்களை பற்றி தெரிந்துக்கொண்டு இணையத்தின் வழியாக பொருட்களை வாங்குவது. இணையதள சேவையில் 24 மணிநேரமும் பொருட்களை பெறலாம். இந்த இணையதள வர்த்தகம் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டில் இரூ.25 ஆயிரம் கோடியாக இருந்த வர்தகம் 2017 ஆண்டில் ரூ 2.5 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது இந்த சேவையின் முன்னேற்றமாகும். குறிப்பாக இளைஞர்களிடையே அதிக தாக்கத்தை இவை ஏற்படுத்தி உள்ளது இதற்கு காரணம் இன்றைய நவீன கைபேசியாகும். இந்த சேவையை பெருநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள் 26 சதவிகிதத்தினரும், சிறிய நகரத்தில் வசிக்கும் மக்கள் 28 சதவிகிதத்தினரும், மற்றும் அனைத்து வித பகுதிகளில் வாழும் பொதுமக்கள் என 20 சதவிதத்தினரும் ஆக சாராசரியாக 20 சதவிகித பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இந்த இணைய தள சேவையை பயன்படுத்தி பொருட்களை பெற்று வருகின்றனர். குறிப்பாக பெண்களைவிட ஆண்கள் இந்த சேவையினை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இந்த சேவையின் வாயிலாக நேரம், பயணதூரம் மற்றும் வரிசையில் நின்று வாங்குவது போன்ற பல்வேறு சிரமங்கங்கள் தவிர்க்கப்பட்டு எளிதாக பெறும் நன்மைகள் மக்களுக்கு கிடைக்கிறது. மேலும் குறைபாடுகள் என்றால் ஆன்லைன் பணம் செலுத்தும் முறைகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விழிபுணர்வு இல்லாமல் நுகர்வோர் ஏமாற்றப்படும் குறைகளும் இந்த சேவையில் உள்ளது. இந்த குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளிலிருந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பாக வர்த்தகம் செய்ய தமிழ்நாடு அரசு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து இதுபோன்ற இணையதள வர்த்தகம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கிணை நுகர்வோருக்காக மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்திவருகிறது. இவற்றை பொதுமக்களும் இளைஞர்களும் முறையாக தெரிந்துக்கொண்டு பாதுகாப்பான வர்த்தகத்தினை செய்யவேண்டும் என கலெக்டர் சி.அ.ராமன், பேசினார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அஐய்சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், ஃபெட்காட் நிர்வாக செயலாளர் செல்வராஜ், தனிவட்டாட்சியர் குடிமை பொருள் இளஞ்செழியன் தலைமை பயிற்சியாளர் அசோக்குமார், ஊரிஸ் கல்லூரி முதல்வர் எழில்கிறிஸ்டதாஸ், பயிற்சியாளர்கள் குமரேஸ்வரன். நாகராஐhன். சிவசங்கரன் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago