முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் வங்கியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில் நடைபெற்றது.

          இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தெரிவித்ததாவது,

          ஈரோடு மாவட்டத்தில் 2017-2018-ம் நிதியாண்டிற்கு மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் ரூ.8,766 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையின்  மூலம் முன்னுரிமை கடனாக ரூ.8,766 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயத்திற்கு ரூ.4,561கோடியும், சிறு, குறு தொழில்களுக்கு ரூ.2,416 கோடியும் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதர முன்னுரிமை கடனான ரூ.1,789 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு தொழில் கடன்களுக்கு முன்னிரிமை அளிக்க வேண்டும். பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் இரு காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஒரு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அனைத்து வங்கி  வாடிக்கையாளர்களையும் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும். மேலும் அனைத்து வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண், செல்போன் எண் இணைக்க மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் 2017-2018-ம் ஆண்டிற்கான மாவட்ட முன்னோடி  வங்கியின் ரூ.8,766 கோடி கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   வெளியிட்டார்.

                இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந.சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மண்டல மேலாளர் எம்.சந்திரசேகரன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஆர்.சரவணன் மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்