முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரி ஆலாடு ஊராட்சியில் அம்மா திட்டமுகாம்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      சென்னை
Image Unavailable

தமிழக அரசின் மக்களைத்தேடி வருவாய் துறையினர் சென்று மக்கள் குறைத்தீர்க்கும் அம்மா திட்டமுகாம் திருவள்ளுர் மாவட்டம்,பொன்னேரி வட்டதிற்குட்பட்ட ஆலாடு ஊராட்சி கொளத்தூர் கிராமத்தில் நடைப்பெற்றது.

10 மனுக்களுக்கு தீர்வு

பொது வினியோக குடும்ப அட்டை மனுக்கள் 4,முதியோர் உதவித்தொகை மனுக்கள் 50,இதர மனுக்கள் 2 என மொத்தம் 56 மனுக்களில் ரேஷன் அட்டை-2,முதியோர் உதவி தொகை 8 என 10 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.பூர்த்தி செய்யப்பட்ட நலச்சலுகைக்கான சான்றிதழ்களை வட்டாட்சியர் ஐவண்ணன்,சிறப்பு தனி வட்டாட்சியர் தமிழ்செல்வன் ஆகியோர் வழங்கினர்.துணை தாசில்தார் ரஜினிகாந்த்,வருவாய் ஆய்வாளர் பாரதி,கிராம நிர்வாக அலுவலர்கள் சாந்தினி,ஜானகிராமன்,தேவன்,தனலட்சுமி கொளத்தூர் கிராம நிர்வாகிகள் கலைசெல்வன்,சந்திரசேகர்,முனிவேல்,கமலா உள்ளிட்ட கிராம பெரியோர்கள்,வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்