முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு நீண்டகால பயிர் கடன் பாசன விவசாய சங்கம் தமிழக அரசுக்கு பராட்டு

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      ஈரோடு

விவசாயிகளுக்கு நீண்டகால பயிர் கடன் பாசன விவசாய சங்கம் தமிழக அரசுக்கு பராட்டு தெரிவித்துள்ளது.

          மத்தியகால கடனாக மாற்றி 11.20 சத வட்டி சூலிப்பதை நிறுத்தி வைக்க தமிழகத்தில் 140, ஆண்டு காலத்திற்கு பிறகு கடும் வறட்சி ஏற்பட்டதையடுத்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகள் பயிhக்கடன் வாங்கியுள்ளனர். வறட்சி காரணமாக பயிர்க்கடன் கட்ட இயலாதவர்களுக்கு ஆண்டுக் கடனை மத்திய, நீண்ட கால கடனாக மாற்றி ஆண்டுதோறும் கட்ட நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது வரவேற்கத் தக்கதாகும்.

          அடுத்து பயிர்க்கடன் முழுமையும் உரிய காலத்தில்  திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தொகை முழுமையும் அரசே ஏற்றுக்கொள்வது நடைமுறையில் உள்ளது. ஆனால் வறட்சி காரணமாக பயிர்க்கடன் கட்ட இயலாத விவசாயிகள் ஒப்புதலுடன் ஆண்டு பயிர்க்கடனை மத்திய கால நீண்ட கால கடனாக மாற்றும் போது ஆண்டு தோறும் 11.20 சத வட்டி வசூலிக்கப்படும்  என அறிவிப்பு வறட்சியான இச்சூழ்நிலையில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் உள்ளது.

          எனவே ஆண்டு பயிர்க்கடனை நீண்டகால, மத்தியகால கடனாக மாற்றும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் அசல் தொகையை மட்டும் செலுத்தும் வகையில் வட்டி வசூலிப்பதை நிறுத்தி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago