முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா திட்ட முகாமில் நல உதவிகள்: தாசில்தார் ஜெயந்தி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரை அடுத்த ஆத்தூர் ஊராட்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தமிழக அரசின் உத்திரவில் அம்மா திட்ட முகாம் நேற்று 31ந் தேதி நடைபெற்றது. ஒவ்வொரு வாரம் ஒரு கிராமம் என்கிற அதிமுக அரசின் ஆணைக்;கிணங்க இந்த பணி நடைபெற்று வருகிறது. ஆத்தூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு வந்தவர்களை நிர்வாக அலுவலர் குப்பன் வரவேற்று பேசினார். வருவாய் ஆய்வாளர் அருள்செல்வம் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு தாசில்தார் ஜெயந்தி முகாமிற்கு தலைமை பொறுப்பேற்று நல உதவிகளை வழங்கி பேசிய போது.அம்மா திட்ட முகாமானது உங்களுக்காக அரசங்கத்தால் கொண்டு வரப்பட்டது. அதாவது மக்களின் குறைகளை அதிகாரிகள் நேரிடையாக அவரவர் கிராமங்களுக்கு சென்று தீர்ப்பதாகும். இன்று பலரது குறைகள் தீர்க்கப்பட்டு உள்ளது. மேலும், உங்கள் கிராமங்கள் வளத்துடன் இருக்க உங்களது வீட்டருகில் உள்ள (அருகில் உள்ள கருவேல மரங்களை சுட்டி காட்டி) இது போன்ற மரங்களை அகற்ற வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என்று பேசினார். 30-ற்கும் அதிகமான மனுக்கள் முகாமில் பெறப்பட்டது அவற்றில் 19 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு உடனுக்குடன் உத்திரவுகளும் வழங்கபட்டது. 10 மனுக்கள் பரிசீலனைக்கும் ஒரு மனு தள்ளுபடி செய்யபட்டது. முகாம் பணிகளில் அலுவலக உதவியாளர் குமார், சிப்பந்தி ஆனந்தன், உள்ளிட்டவர்கள் அம்மா திட்ட முகாமானது உங்களுக்காக அரசால் கொண்டு வரப்பட்டது. அதாவது மக்களின் குறைகளை நேரிடையாக அவரவர் கிராமங்களுக்கு அதிகாரிகள் சென்று தீர்ப்பதாகும். இன்று பலரது குறைகள் தீர்க்கப்பட்டு உள்ளது. மேலும், உங்கள் கிராமங்கள் வளத்துடன் இருக்க உங்களது வீட்டருகில் உள்ள (அருகில் உள்ள கருவேல மரங்களை சுட்டி காட்டி) இது போன்ற மரங்களை அகற்ற வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என்று பேசினார். இம்முகாமில் முகாம் ஏற்பாடுகளில் அலுவலக உதவியாளர் குமார், சிப்பந்தி ஆனந்தன் ஆகியோர் ஈடுபட்டனர் இறுதியில் மோசூர் கிராம அதிகாரி திவாகர் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்