முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் புதிய ஸ்மார்ட் கார்டு இன்று முதல் விநியோகம்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் புதிய ஸ்மார்டு ரேசன் கார்டு வழங்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் முனைவர்பொ.சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                          இன்று முதல் ஸ்மார்ட் கார்டு

நீலகிரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டு இன்று(1_ந் தேதி) முதல் வழங்கப்பட உள்ளது. நான்கு நியாய விலைக்கடைகளுக்கு சேர்ந்து ஒரே இடத்தில் ஸ்மார்ட் காடு கா4லை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வழங்கப்படும். பிற்பகலில் வழக்கம் போல் நியாயவிலைக்கடைகள் செயல்படும். மேற்படி வழங்கப்படும் இடம், அந்தந்த நியாய விலைக்கடைகளில் அறிவிக்கப்படும். புதிய ஸ்மார்டு கார்டு பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் பழைய குடும்ப அட்டைகளை கொண்டு வரும்போது முகவரிஆதாரம் அல்லது ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். ஒரு முறை கடவுச்சொல் மூலமாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளதால் ஏற்கனவே பதிவு செய்துள்ள கைப்பேசி எண் கொண்ட கைப்பேசியை தவறாமல் கொண்டு வரவேண்டும்.

                                 செல்போன் அவசியம் கொண்டு வரவேண்டும்

அந்த இடத்திலேயே ஸ்கேன் செய்து கொள்ள வசதியாக விற்பனை முனைய இயந்திரத்துடன் கடைப்பணியாளர் இருப்பார். ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட ஒப்புகை செய்து அந்தந்த குடும்பதாரர் பதிவு செய்துள்ள கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும் நியாய விலைக்கடையின் அ பதிவேடு வரிசையின் படி ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது அதன்படி 1 முதல் 200 வரை இன்று(1_ந் தேதியும்), 201 முதல் 400 வரை 2_ந் தேதி, 401 முதல் 600 வரை 3_ந் தேதி, 601 முதல் 800 வரை 4_ந் தேதி,  801 முதல் 1000 வரை 5_ந் தேதி, 1001 முதல் 1200 வரை 6_ந் தேதி, 1201 முதல் 1400 வரை 7_ந் தேதியும் வழங்கப்பட உள்ளது.

                                       கட்டணமில்லா தொலைபேசி

நியாய விலைக்கடைகளில் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட மாட்டாது. இனிவரும் காலங்களில் புதிய ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பித்தல், குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுதாரர்களே சூசூசூ.சிடூடீஙீக்ஷஙூ.ஷச்ஙி என்ற இணைய தளமுகவரி அல்லது இ_சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். புதிய ஸ்மார்டு கார்டு பெற கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. இது தொடர்பான கூடுதல் விபரங்கள் பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1077, 18004257016, 18004251071 மற்றும் 8903891077 மூலமும் தொடர்பு கொள்ளலாம் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்