முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் கடை ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      சென்னை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் ரேஷன் கடையில் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தும் முறைகள் குறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. கூடடத்தில் உத்திரமேரூர் கூட்டுறவு சார்பதிவாளர் சரிதா, துணை வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

 ஸ்மார்ட் கார்டு

இதில் அவர்கள் பேசியதாவது பச்சை வண்ணத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஏ.டி.எம். அட்டைபோல் காணப்படும். முதல் பக்கத்தில் தமிழக அரசின் முத்திரை, அட்டை வழங்கும் துறையின் பெயர் ஆகியவை இடம் பெற்றிருக்கும். குடும்பத் தலைவரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, முகவரி, அட்டைக்கான எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அட்டையின் பின்பகுதியில், அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் எண், ‘கியூ ஆர் கோர்டு’ ஆகியவை இடம் பெற்றிருக்கும். பொது மக்களிடமிருந்து ஆதார் தகவல்கள் பெறப்பட்டு ரே‌ஷன் கார்டுடன் இணைக்கும் பணி முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. ஸ்மார்ட் கார்டு பொது மக்களுக்கு வழங்கிய பின் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் பொது மக்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும், ஸ்மார்டு கார்டை பயன்படுத்தும் முறைகள், அதனை கம்பியூடரில் பதிவிறக்கம் செய்வது எப்படி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்