முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான இரண்டு நவீன கலர் டாப்ளர் அல்ட்ராசவுண்டு கருவிகள் : கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான இரண்டு நவீன கலர் டாப்ளர் அல்ட்ராசவுண்டு கருவிகள் பிரிவினை குத்துவிளக்கேற்றி மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தொடங்கிவைத்து பார்வையிட்டு, கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்தார்.

 

உடல் உறுப்புகள்

 

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது.....

அரசு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டு அல்ட்ரா சவுண்டு கருவிகள் நுண்கதிரியியல் துறையிலும், ஒரு கருவி பிரசவ பகுதியிலும் இயங்கி வந்தன. இவற்றில் உடல் உறுப்புகள் கருப்பு வெள்ளiயாகத்தான் திரையில் தெரியும். உறுப்புகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை கணிப்பது கடினம். மேலும் உடல் உறுப்புகளின் அளவுகளை துல்லியமாக அளவிட இயலாது. ஆனால் இந்த நவீன அல்ட்ரா சவுண்டு கருவியால் உடல் உறுப்புகளின் அளவுகளை துல்லியமாக கணக்கிடலாம். படங்கள் வண்ணங்களில் தெரிவதால் சுத்த மற்றும் அசுத்த இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்த குழாய்களின் தன்மை இதில் தெளிவாகத் தெரியும்.

இரத்த ஓட்டம் தெளிவாக கணக்கிடப்படுவதால் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட காலில் உள்ள இரத்தக் குழாய்களின் தன்மையும், கொழுப்புகள் படிந்து மூளைக்குச் செல்லும் இரத்தக்குழாய் பாதிக்கப்படுவதையும், கருவிலுள்ள குழந்தைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவினையும் கணக்கிடலாம். என்பதால் சர்க்கரை வியாதி, பக்கவாதம், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் கழுத்து எலும்பு தேய்மானம் உள்ள நோயாளிகள் அதிகப்பட்ச பலன் அடையலாம் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து நோயாளி ஒருவருக்கு நவீன கலர் டாப்ளர் அல்ட்ராசவுண்டு கருவி மூலம் பரிசோதனை செய்வதை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.அழ.மீனாட்சிசுந்தரம், பேராசிரியர்கள், கதிரியக்கத் துறையின் தலைமை மருத்துவர்(பொ) டாக்டர் ஜெயக்குமார், உதவி மருத்துவர் டாக்டர் சண்முகப்பிரியா செவிலிய கண்காணிப்பாளர்கள் சகாயராணி, கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்