முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்திற்கு உபகரணங்களை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி வழங்கினார்.

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      திருப்பூர்
Image Unavailable

                 திருப்பூர் மாவட்டம், அவிநாசி சாலை, அனுப்பர்பாளையத்தில் செயல்படும்   கனரா  வங்கி  ஊரக சுய வேலைவாய்ப்பு  பயிற்சி  நிலையத்திற்கு  நபார்டு  வங்கியின்  சார்பில் வழங்கப்பட்ட  ரூ.3  இலட்சம்  மதிப்பிலான  உபகரணங்களை  மாவட்ட கலெக்டர்   ச.ஜெயந்தி  வழங்கினார்.

                திருப்பூர் மாவட்டத்தில், கனரா வங்கியின் நூற்றாண்டு விழா ஊரக வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் ஊரக  சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் 2011 -ம் ஆண்டு முதல்  சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளும் மற்றும் அரசு வங்கி கடன் பெறும் நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் இலவசமாக குறுகியகால முழுநேர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சி பெறுவோருக்கு பயிற்சி காலத்தில்  இருவேளை தேனீர் மற்றும் மதிய உணவுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.                2016 - 2017 -ம்  நிதி ஆண்டிற்கு 1323 நபர்களுக்கு பலவிதமான திறன்வளர்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2017- 2018 -ஆம் ஆண்டிற்கு 750 நபர்களுக்கு பயிற்சிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

           மேலும், இப்பயிற்சி நிறுவனத்திற்கு நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.2,99,750/- மதிப்பில் எம்பிராய்டரி மெஷின், ஓவர்லாக் மெஷின் ஜூட் கிளாத் மற்றும் சிங்கர் பவர் தையல் இயந்திரம் மொமைபல் பழுதுபார்த்தல் பயிற்சி உபகரணங்கள் மற்றும் கணினி ஆகிய உபகரணங்களை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்.

            முன்னதாக 2017- 2018 -ம் நிதியாண்டில் நடக்கவிருக்கும் பயிற்சிக்கான வருடாந்திர செயல் திட்ட மலரை மாவட்ட கலெக்டர்  வெளியிட்டு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி நிறைவு பெற்ற நபர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி பயிற்சி பெற்றவர்களும் மற்றும் பயிற்சியில் ஈடுபடுவோரும் அனைவரும் சிறப்பான முறையில் தொழில் தொடங்கி பொருளாதார ரீதியில் உயர்வடைய வேண்டும் எனவும்  தெரிவித்தார்கள்.

             இந்நிகழ்வின்போது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ். சுந்திரமூர்த்தி, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் வி.எஸ். ஸ்ரீராம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், நிதிசார் கல்வி மைய ஆலோசர் எஸ் விஜயகுமார், கனரா வங்கி முதன்மை மேலாளர் ரவி, பயிற்சி நிலைய இயக்குநர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்