முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகள்: கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே வழங்கினார்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை மூலமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், ஆகியோர் உடன் இருந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1,627 நியாய விலைக் கடைகளில் 6,30,657 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளது. தற்போது, 23,667 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பெற்றுள்ளது.நேற்று முதல் பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற ஏற்கனவே தங்களது குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் (கைபேசி) எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும். குறுஞ்செய்தி வரப்பெற்ற 7 தினங்களுக்குள் சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடையில் தங்களது பழைய குடும்ப அட்டை அசல் மற்றும் றிழுளு-ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் (கைபேசி எண்) உடன் சென்று ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். பழைய குடும்ப அட்டையில் நியாய விலைக்கடை விற்பனையாளரால் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டது என்ற ரப்பர் முத்திரை பதிவு செய்தவுடன், தங்களுக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியை (ழுவுறி எண்) நியாய விலைக்கடை விற்பனையாளரிடம் தெரிவித்து றிழுளு செயலியில் பதிவு செய்யவேண்டும்;. மேலும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, புதிய ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில்,தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை வழங்கீட்டளவு விவரங்கள், குடும்ப அட்டை புதியதாக பெற / முகவரி மாற்றம் செய்ய / புதிய பெயர் சேர்க்க அல்லது நீக்க / திருத்தங்கள் மேற்கொள்ள, நியாய விலைக்கடை தொடர்பான புகார்கள் செய்ய வேண்டிய நடைமுறை, நியாய விலைக்கடைகளின் திறந்திருக்கும் விவரம் / இருப்பு விவரம் அறிந்து கொள்ள ஆகிய சேவைகளுக்கு வட்ட வழங்கல் அலுவலகம் செல்லவேண்டியதில்லை. உங்கள் வசிப்பிடத்தின் அருகில் உள்ள அரசு இ-சேவை மற்றும் இன்டர்நெட் சேவை மூலமாக ஷ்ஷ்ஷ்.tஸீஜீபீs.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் உங்கள் பகுதி நியாய விலைக் (ரேஷன்) கடை திறப்பு நிலை அறியவும், பொருட்கள் இருப்பு உள்ளதா என்பதை அறியவும், நியாய விலைக் (ரேஷன்) கடையில் உங்கள் குடும்ப அட்டைக்கு வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால் புகார் செய்யவும், மேற்கண்ட இணையதள வழியை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது அரிசியுடன் ஒருபகுதியாக கோதுமையும், நகர்ப்புறங்களில் 10 கிலோவும், கிராமப்புறங்களில் 5 கிலோ வரையும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், கோதுமை வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்