முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை நேரு கிட்ஸ் அகாடமியில்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      கோவை
Image Unavailable

நேரு கல்வி குழுமங்கள் சார்பில் கடந்த ஆண்டு நேரு கிட்ஸ் அகாடமி பள்ளி கோவை துடியலூர் மற்றும் கோவைப்புதூரில் துவக்கப்பட்டது.

இதன் முதலாம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா கோவை குனியமுத்தூரில் அமைந்துள்ள நேரு கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நேரு இன்ஸ்டிடியூட் ஆ/ப் மேனேஜ்மெண்ட் ஸ்டடிஸ் கல்லூரியின் முதல்வர் டாக்டர். கே. நந்தினி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது - நமது முன்னாள் பாரத பிரதமர் பண்டிட் நேரு அவர்களும், முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் குழந்தைகள் மீது அளவற்ற பிரியம் வைத்திருந்தார்கள். அது போல் நாமும் பிரியமுடன் வளர்க்க வேண்டும். மாணவர்களின் நலனில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும். அவர்களது வயதுக்கேற்ப தான் மூளை வளர்ச்சி உள்ளது. அவர்களின் உலகமே தனி, அவர்களின் மேல் நமது எதிர்பார்ப்புகளை திணிக்கக்கூடாது. குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் மனத்திற்கேற்ப பெற்றோர்கள் தங்களது மனநிலைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். அன்பாகவும், ஆதரவாகவும் செயல்படுங்கள். நமது கோபங்களையும், டென்சன்களையும் குழந்தைகளிடம் காட்டவேண்டாம். குழந்தைகளுக்கு கம்ப்யூட்டரில் வீடியோகேம் விளையாடவும், செல்போனில் கேம் விளையாடவும் அனுமதிக்காமல் மற்ற நமது பாரம்பரிய விளையாட்டுக்களையும், தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் - என்று கூறினார்.  

முன்னதாக நடைபெற்ற விழாவில் சகிரா சுல்த்தான வரவேற்புரையாற்றினார். நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக தலைமை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான டாக்டர்.பி.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். நேரு கிட்ஸ் அகாடமி முதல்வர் சைத்தன்யா கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

விழாவில் மொத்தம் 145 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. பட்டமளிப்பு விழாவை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழா முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சகிரா பேகம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்