முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணத்தில் ஸ்மார்ட் கார்டு: எம்எல்ஏ சு.ரவி துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

அரக்கோணத்தில் ஸ்மார்ட் கார்டுகளை கிராம மக்களிடம் வழங்கி எம்எல்ஏ சு.ரவி துவக்கி வைத்தார் வேலூர் மாவட்டம், அரக்கோணம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அரிகலாபாடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில்; தமிழக அரசின் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்ட துவக்க விழாவிற்கு எற்பாடுகள் செயயப்பட்டது. இந்த விழாவிற்கு தாசில்தார் பாஸ்கர் தலைமை தாங்கினார். தனி துணை (சிப்காட்) ஆட்சியர் புங்கொடி முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜிசோழன் வரவேற்று பேசினார். அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசிய போது அரக்கோணம் வட்டத்தில் மொத்தம் 78ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. முதல் தவணையாக 11 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளன. எனவே, இதன் துவக்க விழா தாசில்தார் விருப்பபடி இன்று நடக்கிறது. இதன்பயன் நன்கு அறிந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆறுமாதத்தில் கொண்டு வருவேன் என்றார் எதிர்கட்சிகள் அன்று முடியாது என ஏளனம் செய்தது உங்களுக்கும் நினைவிருக்கும். நமது சட்ட மன்ற தொகுதியில் அதிக அளவில் புதிய குடும்ப அட்டைகள் தேவை இருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு இந்த வேளையில் வேண்டுகோள் விடுக்கிறேன். என்றும் எம்எல்ஏ. சு.ரவி பேசினார். நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் சாந்தி, பள்ளுர் வேளாண்மை வங்கி தலைவர் ஏ.கணேசன், காவேரிபாக்கம் முன்னாள் ஒன்றிய செயலாளர் சாலை பழனி, முன்னாள் கவுன்சிலர் தோ.பாண்டுரங்கன், ஒன்றிய பேரவை செயலாளர் நா.சங்கர், முன்னாள் வார்டு உறுப்பினர் கேசவன், ஊர் பிரமுகர் பாலகிருஷ்ணன், உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் கிராம அதிகாரி கலைவாணன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago