முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்ட வறட்சி மற்றும் குடிநீர் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் செய்தியாளர்களுடன் கள ஆய்வு

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தமிழ்நாடு தொழில்முனைவோர் வளர்ச்சிக்கழக இயக்குநர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இராஜாராமன் தலைமையில் கலெக்டர் எம்.ரவி குமார் முன்னிலையில் வறட்சி மற்றும் குடிநீர் பணிகள் குறித்து செய்தியாளர்களுடன் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கள ஆய்வு செய்தியாளர்கள் பயணத்தின் போது கண்காணிப்பு அலுவலர் இராஜாராமன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 1,78,000 ஹெக்டேர் பரப்பில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,48,000 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது. பாதிப்பு அடைந்துள்ள பயிர்களுக்கு பயிர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 1,761 கிராம குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 325 கிராம குடியிருப்புகள் தவிர மற்ற அனைவருக்கும் கூட்டுகுடிநீர்திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கபட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் 21 நாட்களுக்கு தண்ணீர் வழங்கி வந்த நிலையில் தற்பொழுது 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் கோவில்பட்டி நகராட்சியின் மூலம் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கி வந்த நிலையில் தற்பொழுது 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.புதூர் ஊராட்சி ஒன்றியம் அயன்கரிசல்குளம் கிராமத்தில் ரூ.4 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், கீழக்கரந்தை, ராகுராமபுரம், வெளவால்தொத்தி, அயன்பொம்மையாபுரம், பிள்ளையார்நத்தம், சின்னமலைக்குன்று, கடலையூர், லிங்கம்பட்டி, குலசேகரபுரம், திட்டங்குளம், எத்திலப்பநாயக்கன்பட்டி, ஜெகவீரபாண்டியபுரம், தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களுக்கு செய்தியாளர்களுடன் நேரடியாக சென்று பொதுமக்களிடம் பயிரிடப்பட்டுள்ள விவசாய பணிகள் குறித்தும், குடிநீர் வழங்கப்படுவது குறித்தும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணிகளையும், சீவலப்பேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி காலங்களில் ஏற்படுகின்ற தட்டுப்பாட்டினை நீக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராஜகோபாலசுங்கரா மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago