முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் தலைகீழாக தொங்கி செஸ் விளையாடி வாலிபர் சாதனை

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி இளையரசனேந்தல் மெயின்ரோட்டில் அமைந்துள்ள கிரேண்ட் கிட்ஸ் பிளே ஸ்கூலில் நடைபெற்ற விழாவில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் சார்பாக முருகானந்தம் (32) என்ற இளைஞர்;; யுனிவெர்ஷல் புக் ஆப் ரெக்காட்டிற்காகவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் இன்புற்று வாழ மழை வேண்டியும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளைஞர் தலைகீழா தொங்கியவாரே ஒரு மணி நேரத்தில் 20 நபர்களுடன் செஸ் விளையாடி 16 நபர்களை வெற்றி கொண்டார். இந்நிகழ்ச்சியில் கிரேண்ட் கிட்ஸ் பள்ளியின் தாளாளர் அமுதவல்லி வரவேற்புரை நிகழ்த்தினார். சுவாமி விவேகாந்தா யோகா கழகத்தின் ஆலோசகர் ராஜகோபால் தலைமை வகித்தார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் போட்டியினை துவக்கி வைத்தார். மைக்ரோபாயிண்ட் தொழிற்பயிற்சி பள்ளியின் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங்க், நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுவாமி விவேனகாந்தா யோக ஸ்கேட்டிங் கழகத்தின் நிறுவனர் சுரேஷ்குமார், கிங்ரேசர் யோகா ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் நிறுவனர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் மாரியப்பன், ஆசிரியை கார்த்திகாபவானி, செல்வி ஆகியேர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை ரேவதி நன்றி கூறினார். விழா ஏற்பாட்னை சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தினர் செய்திருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்