முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் 2,69,809 குழந்தைகளுக்கு முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      திருச்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கீழப்புலிவார் சாலையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று (02.04.2017) நடைபெற்ற முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

இளம்பிள்ளை வாதம்

 

 

மாவட்ட கலெக்டர் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

 

தமிழ்நாட்டில் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவை முற்றிலும் ஒழிக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று (02.04.2017) முதல் தவணையாக போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. இம்முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டுமருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளின் கை விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. இன்று விடுபடும் குழந்தைகளுக்கு இன்றும் (03.04.2017) நாளை மறுநாளும் (04.04.2017) மருத்துவப் பணியாளர்கள் வீடுதேடி சென்று சொட்டு மருந்து வழங்குவார்கள்.

திருச்சி மாவட்டத்தில் முதல் தவணையாக 02.04.2017 அன்று கிராமப்புறங்களில் 1412 நிலையான மையங்களிலும், நகர் புறங்களில் 280 நிலையான மையங்களிலும், ஆக மொத்தம் 1692 நிலையான மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற சுற்றுலாதலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 53 இடங்களில் வழங்கப்படும். மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவர்களுக்கு 70 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்;படும்.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும்; பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து நகர் நல மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மேலும் இரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் இன்று ரயில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 175112 குழந்தைகளுக்கும், நகர்புறங்களில் 94166 குழந்தைகளுக்கும், இடம் பெயர்ந்து வாழும் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள 531 குழந்தைகளுக்கு என மொத்தம் 2,69,809 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாநகராட்சி முதன்மைப் பொறியாளர் நாகே~;, இணை இயக்குநர் (குடும்பநலம்) டாக்டர்.சம்சத்பேகம,; துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ரவீந்திரன், நகர்நல அலுவலர் டாக்டர்.அல்லி, உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்