முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் போலியோ சொட்டுமருந்து முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-  ராமநாதபுரம் மாவட்டத்தில் போலியோ சொட்டுமருந்து முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் அரசு ஆரம்ப சுகாதார தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் மக்கள் தொகை எண்ணிக்கை 13லட்சத்து 70ஆயிரத்து 448 பேர். இதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1லட்சத்து 31ஆயிரத்து 250. இந்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 2017 ஆண்டிற்கு தேசிய போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் இரண்டுகட்டமாக 02.04.2017 இன்று முதல் சுற்றும் 30.04.2017 அன்று 2-வது சுற்றும் நடத்தப்படவுள்ளது.  மேலும் சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுகாதாரப் பகுதிகளில் 1217 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு (கிராமப் பகுதிகளில் 1122 மற்றும் நகர்ப்பகுதியில் 95) 4897 பணியாளர்களை கொண்டு முகாம் நடைபெறுகிறது.  எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இம்முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர்.மீனாட்சி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.முகமது சுல்த்தான், மருத்துவர்கள் ஆனந்தக்குமார்,; பாரதிப்ரியா மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்