முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-விருதுநகர் மாவட்டம், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் இன்று (02.04.17), மாவட்டத்தில் மின்னணு குடும்பட்டைகள் வழங்கும் திட்ட தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்.தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில்  பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் மின்னணு குடும்ப அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கி, மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்து தெரிவித்ததாவது :-
 இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லாத விலையில்லா அரிசி வழங்கும் உண்ணத திட்டத்தை குடும்ப அட்டைதாரர்களுக்கு நடைமுறைப்படுத்திட  அம்மா அவர்கள் ஆணையிட்டார்கள். எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் பொது விநியோகத்திட்டத்தை அறிவித்து தமிழக மக்களின் பசிப்பிணியை போக்கியதுடன், அவர்களின் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்து அன்னப்பூரணியாக திகழ்ந்தவர்  அம்மா அவர்கள்.

பொது விநியோகத்திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கத்தில் ரூ.330 கோடி செலவில் தமிழகத்தில் 1கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்கள். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 961 நியாயவிலைக்கடைகள் மூலமாக பொதுவிநியோகத்திட்டத்தில் பயன்பெற்று வரும் 5 லட்சத்து 35 ஆயிரத்து 396 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இன்று (02.04.17) சிவகாசி வட்டத்தில் முதற்கட்டமாக 43 ஆயிரத்து 298 மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. மாவட்டத்தில் பிற குடும்ப அட்டைதாரகளுக்கும் விரைந்து வழங்கப்பட உள்ளது. மின்னணு குடும்ப அட்டைகள் பெறும் வரை பழைய குடும்ப அட்டைகளை வைத்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
 உணவு உற்பத்தியில் மிகை மாநிலங்களில் கூட குடும்ப அட்டைதாரர்களுக்கு விலைக்குத்தான் அரசி வழங்கப்படுகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் மட்டும் தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2011ம் ஆண்டு முதல் விலையில்லா அரசி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவுத்துறைக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,500 கோடி மானியமாக ஒதுக்கி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்று வரும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.
 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 35 ஆயிரத்து 396  குடும்ப அட்டைதாரர்களின் கைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விவரங்களை அவ்வப்போது குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகத் திட்டம் சார்ந்த குறைகளை தெரிவிப்பதற்கு ஏதுவாக 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி சேவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளில் பதிவுசெய்துள்ள கைபேசி எண்ணிற்கு மின்னணு குடும்ப அட்டை அச்சடிக்கப்பட்டுள்ளது என்ற குறுஞ்செய்தியுடன் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும் ரகசிய குறியிட்டு எண் பெறப்பட்ட ஏழு தினங்களுக்குள் தங்களுக்குறிய நியாயவிலைக்கடைகளுக்கு சென்று மின்னணு குடும்ப அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என  பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
 இந்நிகழ்ச்சியில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்யசுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் செந்தில் ஆறுமுகம், துணைப்பதிவாளர்கள் ராமமூர்த்தி, சரவணன் உட்பட அரசு அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்