முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீயோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா. சவான் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      தூத்துக்குடி
Image Unavailable

 

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா. சவான் , இளம்பிள்ளை வாதத் தடுப்பு சிறப்பு சொட்டு மருந்து வழங்கும் முதற்கட்ட முகாமினை நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் தொடங்கி வைத்து, பின்னர் தெரிவித்ததாவது:- 1995-ம் ஆண்டு முதல் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக அகற்ற ஆண்டிற்கு இருமுறை சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் 2014-ம் ஆண்டு மார்ச் 27-ம் நாள் இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் போலியோ சிறப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 2-ம் தேதி முதற்கட்டமும், ஏப்ரல் 30-ம் தேதி இரண்டாம் கட்டமும் நடைபெறுகிறது. நமது மாவட்டத்திலுள்ள 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1,236 மையங்களில் மூலம் 1,53,000 குழந்தைகளுக்கு முதற்கட்ட முகாமில் இளம்பிள்ளைவாத தடுப்புச் சொட்டு மருந்து வழங்க மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமினை சிறப்பாக நடத்தி முடிக்க 4,944 பணியாளர்கள் (பொது சுகாதாரத்துறை, ஊட்டச்சத்துத்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை மற்றும் தன்னார்வலர்கள்) பணியில் உள்ளனர். இது தவிர முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 233 ஊர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையான சொட்டு மருந்து மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சியில் உரிய குளிர்பதன முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.மக்கள் அதிகமாக கூடும் இடங்களான புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ப+ம்புகார் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில் 17 முகாம்களும், உரிய பேருந்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் நடமாடும் குழுக்கள் 8-ம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் ஆய்வுப் பணிகளுக்கு 156 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சொட்டு மருந்து கொடுக்கும் பணியாளர்களுக்கு (பொது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வத்தொண்டர்கள்) ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டிலுள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, இளம்பிள்ளை வாதத் தடுப்பு சொட்டு மருந்தினை போட்டு, நோயற்ற வாழ்வினை வாழ மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கிள்ளிய+ர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராNஐஷ்குமார், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவீந்திரன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) மரு. மதுசூதனன், த.சுந்தர வேல்விழி(புள்ளியியல்), நகராட்சி ஆணையர் (நாகர்கோவில்) சுரேஷ்குமார், உறைவிட மருத்துவர் மரு.மேரி விஐயா, உலக சுகாதார நிறுவன ஆலோசகர் மரு.பிரதாப் சந்திரன், நகர்நல அலுவலர்(நாகர்கோவில்) மரு.வினோத் ராஐh, ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் தலைவர் ஸ்டேன்லி, செயலர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago