திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில், வேளாண்மைத் துறையின் சார்பில் தென்னை மரங்களுக்கு சிக்கனமான முறையில் குடிநீர் பயன்படுத்தும் முறையினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      ஈரோடு

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும், 11ல் உள்ளூர் விடுமுறை விடுக்கப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் அறிவித்தபடி நடக்கும். இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 29ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளான, 11ம் தேதி அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: