கடலூர் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      கடலூர்

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, முதல் தவணை தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தார் போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயினை தடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து 1995 ஆண்டு முதல் செயல்பட தொடங்கப்பட்டு தற்போது 22வது முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 0-5 வயதுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் இரண்டு தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் 02.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய நாட்களில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) கடலூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இத்திட்டம் துவங்கியபிறகு கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போலியோவால் ஒரு குழநதைகூட பாதிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 2,48,286 குழந்தைகள் பயனடைகின்றனர். இப்போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள், புதிதாக உருவான காலனிகள் போன்றவைகள் தேர்தெடுக்கப்பட்டு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 1613 மையங்கள் மற்றும் அடுத்தடுத்த மாவட்ட எல்லை ஓரங்கள், குடிசைப்குதிகள், புதிதாக உருவான காலனிகள், பணி நிமித்தம் காரணமாக இடம்பெயரும் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட 2,48,286 குழந்தைகளுக்கு இச்சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இப்பணிகளில் சுகாதாரத் துறையுடன் பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத் துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை, வருவாய்த் துறை, இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. முகாம் நாட்களில் முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் இப்பணி புரிய பல்வேறு துறைகளைச் சார்ந்த 6452 பணியாளர்களும், இப்பணிகளை மேற்பார்வையிட 209 மேற்பார்வையாளர்களும், மாவட்ட அளவில் 10 சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகள் அடுத்து வரும் இரண்டு நாட்களில் இப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று பார்வையிட்டு விடுபட்டோருக்கு சொட்டு மருந்து வழங்க உள்ளனர். மேலும், இப்பணிகளுக்காக நடமாடும் குழுக்கள் பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள், கோவில்கள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர் எஸ்.மாதவி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கே.ஆர்.ஜவஹர்லால், மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் விஜயகுமார், நகர் நல அலுவலர் டாக்டர் குமரகுருபரன், முன்னாள் நகர் மன்றத்தலைவர் ஆர்.குமரன், முன்னாள் துணை நகர் மன்றத்தலைவர் ஜி.ஜே.குமார், முன்னாள் உள்ளாட்சி பிரநிதிகள், துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: