முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த கலெக்டர் எம்.ரவி குமார் உத்தரவு.

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜாமணி முன்னிலையில் கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் எம்.ரவி குமார் பேசியதாவது:தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தென் மண்டல பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படியான பணியாளர்களை கொண்டு தீவிரப்படுத்த வேண்டும். பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள் மூலம் இன்று முதல் ஒருவார காலத்திற்குள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தவேண்டும்.சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்படும் தொழிற்சாலைகள், குளிரூட்டும் நிலையங்கள், திரையரங்குகள், பள்ளிகள் மீது பொது சுகாதார சட்டம் மற்றும் மாநகராட்சி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும. குறிப்பாக பள்ளிகளில் சுகாதாரத்தை மிக சிறப்பாக பின்பற்றவேண்டும், பின்பற்றாத பள்ளி நிறுவனங்களின் சுகாதார சான்று ரத்து செய்யப்படும். கொசுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றார்.ஆய்வுக்கூட்டத்தில், துணை இயக்குநர்கள் டாக்டர் எம்.மதுசூதனன், டாக்டர் ஏ.டி.போஸ்கோராஜா, மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் பீரதீப்.வி.கிருஷ்ணகுமார், சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின், அரிகணேஷ் ராஜபாண்டியன், கண்ணன், ராஜசேகரன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago