முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி அரசு கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, பங்கேற்பு

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி அரசு கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 14வது பட்டமளிப்பு விழாவில் கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2011ம் ஆண்டு கல்லூரி படிப்பில் சேர்ந்த 100 மாணவ, மாணவியர்களுக்கு பட்டமளித்து பாராட்டி பேசினார்மாணவ, மாணவியர்களுக்கு பட்டமளித்து கலெக்டர் பேசியதாவது:மருத்துவப்பட்டம் பெற்ற 100 மாணவ, மாணவியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மருத்துவப்பணி என்பது ஒரு புனிதமான பணியாகும். இப்பணி நோயாளிகளுக்கு செய்யும் சேவை ஆகும். மருத்துவப்பணியை வியாபார நோக்கமாக செய்யக் கூடாது. மருத்துவர்கள் நோயாளிகளை அறிவுப்பூர்வமாக அணுகவும், நோயாளி மற்றும் உறவினர்களிடம் தெளிவாக நோயாளியைப் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். இதயம் எவ்வித பாரபட்சமின்றி அனைத்து உறுப்புகளுக்கம் தேவையான இரத்தம் வழங்குகிறது. இதயம், தான் தீவிரமாக நோயுற்றிருந்தாலும் தொடர்ந்து செயல்பட்டு உடல் உறுப்புகள் அனைத்திற்கும் தேவையான இரத்தத்தை அனுப்புகிறது. இதயம் முக்கியமான உறுப்பு என்றாலும் அது மூளையின் கட்டுப்பாட்டிற்கு இணங்கி செயல்படுகிறது. அதைப்போலவே இளம் மருத்துவர்கள் தங்களைவிட வயது மூத்த மருத்துவர்களின் அனுபவத்திற்கு கீழ்படிந்து நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தினமும் சில மணித் துளிகளாவது பேசி கலந்துரையாட வேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளை அன்புடனும், கனிவுடனும் அணுகவேண்டும். மேலும் அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வாய்ப்பு பெற்ற மருத்துவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் கடமையாற்ற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விழுப்புரம் கலெக்டர் எல்.சுப்பிரமணியம், டாக்டர் எம்.சென்னியப்பன், கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ்.மேரிலில்லி, கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அர்ஷியா பேகம், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அனிதா மற்றும் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்