முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

45 குழந்தை தொழிலாளர் நல சிறப்பு பயிற்சி மையங்களுக்கு கைவினைப் பொருட்கள் மற்றும் மருத்துவ முதலுதவி பெட்டகம்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல் வேலைவாய்ப்புகடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டாமாற்றுதிறனாளிகளுக்கு உதவி முதியோர் உதவித் தொகைஇ காவல்துறை பாதுகாப்பு மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 557 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் 45 குழந்தை தொழிலாளர் நல சிறப்பு பயிற்சி மையங்களுக்கு நோட்டு, பென்சில், ஸ்கேல், போன்ற கைவினை பொருட்கள் மற்றும் மருத்துவ முதலுதவி அடங்கிய பெட்டகங்கள், தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்தில் சிக்கி கொடுங்காயம் அடைந்தவர் மற்றும் நீரில் முழ்கி உயிரிழந்தவர்களின் 2 குடும்பங்களுக்கு தலா ரூ.50,000ஃ- வீதம் மொத்தம் ரூ.1,00,000-க்கான காசோலைகளையும், 2014 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலில் அதிக நிதிவசூல் செய்து சாதனை புரிந்த 10 வட்டாட்சியர்களுக்கு தமிழக ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்ட பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.இக்கூட்டத்தில்; மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரமேஸ்வரி,; சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்