முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை ஆட்சியரகத்தில் குறைதீர்வு கூட்டம் 154 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுதிறனாளிகளிடமிருந்தும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் ஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 809 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் வழங்கி, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக 2016-17 ஆம் ஆண்டு நடைபெற்ற மருத்துவ முகாம் மூலம், 154 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சக்கர நாற்காலி (29), மூன்று சக்கர சைக்கிள் (2), காதொலி ஆகிய உதவி உபகரணங்கள், கடந்த வாரம் மனுக்கள் அளித்த 3 மாற்றுத்தினாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகள், மேலும், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்தினாளிகள் 3 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், 2 நபர்களுக்கு மடக்கு சக்கர நாற்காலி, 2 நபர்களுக்கு ஊன்றுகோல், ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்