முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை அதிகரித்தது ஸ்டேட் பேங்க்

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, ஸ்டேட்  பேங்க் ஆப் இந்தியாவானது தனது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டது. அதோடுமட்டுமல்லாது இந்த வங்கியுடன் 6 கடன் வழங்கும் வங்கிகளும் இணைக்கப்பட்டுவிட்டன. சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அளவை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிகரித்துள்ளது. மெட்ரோபாலிடன் நகரங்களில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும். அதேமாதிரி காசோலை பெறவும் லாக்கரை பயன்படுத்தவும் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இருப்பதோடு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

37 கோடியாக உயர்வு

இதர வங்கிகள் எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய கட்டண முறையானது ஏற்கனவே ஸ்டேட் பேங்க ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 5 வங்கிகளுக்கும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பாரத மகளிர் வங்கிக்கும் பொருந்தும்.  புதிய விதி முறைகள் கடந்த 1-ம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. 6 வங்கிகள் இணைப்பு மூலம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர்கள் 37 கோடியாக உயர்ந்துள்ளது.

ரூ.5000-ஆக உயர்வு

நாட்டில் உள்ள 6 மெட்ரோ நகரங்களில் ஒவ்வொரு மாதமும் சேமிப்பு கணக்கில் இருப்பு தொகை சராசரியாக குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்கில் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைந்தால் மெட்ரோ நகரில் ரூ.100-ம் கிராமப்புறங்களில் இருக்கும் வங்கிகளில் ரூ.20-ம் அபராதம் விதிக்கப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வெப்ஷெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 31-ம் தேதி முடிய  காசோலை வழங்கப்படாத வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500-ம் காசோலை பெற்றவர்கள் சேமிப்பு கணக்கில் ரூ.1000-மும் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக இருந்தது.

ரூ.100 அபராதம்

இந்தியாவிலேயே பெரியவங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவானது அடுத்த நிதியாண்டில் இருந்து சேமிப்பு கணக்கில் இருப்புத்தொகையை தரம் பிரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி மெட்ரோ வங்கிகளில் மாதந்தோறும் சராசரியாக சேமிப்பு கணக்கில் ரூ.5000 இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் ரூ.50 முதல் ரூ.100 வரை விதிக்கப்படும். நகர்ப்புற வங்கிகள் மற்றும் செமி நகர்ப்புற வங்கிகளில் முறையே சேமிப்பு கணக்கில் ரூ. 3000 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வங்கிகளில் சேமிப்பு கணக்கில் மாதம் சராசரியாக ரூ.1000 வரை இருப்பத்தொகை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.20 முதல் ரூ.50 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய விதிமுறைகள் கடந்த 1-ம் தேதி முதலே அமுலுக்கு வந்துவிட்டாலும் சுரபி ,அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் பிரதமர் தன்ஜன் யோஜனா கணக்குகளுக்கு பொருந்தாது.

காசோலைக்கு ரூ.3 கட்டணம்

காசோலை வழங்குதல் பொருத்தவரை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முதல் தடவையாக நடப்பு நிதியாண்டில் 50 காசோலைகள் இலவசமாக வழங்கப்படும். பின்னர் வழங்கப்படும் ஒவ்வொரு காசோலைக்கும் ரூ.3 கட்டணம் வசூலிக்கப்படும். 25 காசோலைகள் அடங்கிய புத்தகத்திற்கு   ரூ.75-ம், சர்வீஸ் சார்ஜூம் வசூலிக்கப்படும். 50 கொண்ட கசோலை புத்தகத்திற்கு சர்வீஸ் சார்ஜ் தவிர ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அந்த வெப்சைட்டில் மேலும் கூறப்பட்டுள்ளது.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்