முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

 

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 03.04.2017 அன்று, கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 15 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 160 என மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் 3 பேருக்கு இரவுக்காவலர் பணிநியமன ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேருக்கு 1 நபருக்கு சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்காக மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.20,000 க்கான காசோலையினையும் கலெக்டர் சு.பழனிசாமி, வழங்கினார்.இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ.தேன்மொழி, மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago