முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூகத் தணிக்கை குறித்த நாட்காட்டியை கலெக்டர் சிவஞானம் வெளியிட்டார்.

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்.-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்,  2017-2018ம் நிதியாண்டில், 450 கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ள சமூகத் தணிக்கை குறித்த நாட்காட்டியை,  மாவட்ட ஆட்சித் தலைவர்  அ.சிவஞானம்,  வெளியிட திருமதி.பெ.திலகவதி,  திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் பெற்றுக் கொண்டார்.

2017-18ம் ஆண்டிற்கான சமூகத் தணிக்கை நாட்காட்டியை  வெளியிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்  பேசியதாவது :-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு திட்டத்தின் பயன்கள் முறையாக சென்றடைந்து உள்ளதா என்பதை சமூகத் தணிக்கை கண்காணித்து வருகிறது. மேலும்; மக்களுக்கும் திட்டத்தை செயல்படுத்துவோர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் என்றும் திட்டம் பற்றிய  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்றும், பயனாளிகளின் உரிமைகளையும்;, கடமைகளையும் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். மேலும் நேர்மையான தூய்மையான மற்றும் முறைகேடற்ற வெளிப்படையான நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சமூகத் தணிக்கை அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். சமூகத் தணிக்கை நடைபெறும் கிராம ஊராட்சிகளுக்கு  பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திட்டத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும்  சமூகத் தணிக்கைக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சமூக தணிக்கையின் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பெருமளவில் மக்களின் பங்கேற்பு  உறுதி செய்திட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  இந்நிகழ்வில் திரு.காதர் மைதீன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) மற்றும் திரு.எஸ். மணி, மாவட்ட வள அலுவலர், சமூகத் தணிக்கை, விருதுநகர்  ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago