முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருள்மிகு கந்தநாதர் கோவில் கும்பாபிசேகம்

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      தேனி
Image Unavailable

 ஆண்டிபட்டி -  ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த அருள்மிகு கத்தநாதர் கோவில் கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.இத்திருக்கோவிலில் முருகன் அருள்பாளித்து வருகிறார்.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு சஷ்டி விரதம் இருந்து இக்கோவில் தரும் அருட்பிரசாதத்ததை உண்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.சஷ்டி விழா வெகுவிமர்சியாக நடைபெறும்.அருள்மிகு கந்தநாதர் கோவில் மகா கும்பாபிசேகம் விழாவை முன்னிட்டு நான்கு நாட்கள் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் ஓத யாக சாலையில் பூர்ணாகதி வைபவம் நடைபெற்றது.கோமாதா பூஜையுடன்,கும்பங்கள் புறப்பாடாகி பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து

கொண்டுவரப்பட்ட புத நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டது.அப்போது கருடன் வலம் வந்ததால் பெண்கள் குளவை போட்டும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.சிறப்புவிருந்தினராக தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம்,மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பாஸ்கர்,ஒய்வு பெற்ற டி.ஜி.பி.முகர்ஜி,ரத்தினபாலிமுகர்ஜி கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும்,கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாட்டினை அழகர்சாமி,டாக்டர்.சாமிநாதன் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்