முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.12,25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்;சாவூர் கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று (4.03.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.குறை தீர் நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியலிருந்து 1 பயனாளிக்கு ரூ.50,000த்திற்கான காசோலையினையும், கலெக்டர் அவர்களின் தன் விருப்ப நிதியிலிருந்து 4 பயனாளிகளுக்கு பெட்டிக்கடை, மளிகை கடை, இட்லி கடை வைப்பதற்கு தலா ரூ.20,000என ரூ.80,000த்திற்கான காசோலைகளையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5000 மதிப்பிலான 5 விலையில்லா தையல் இயந்திரங்களையும், குத்தலாம் வட்டம், மஸ்தகுடி வடமட்டம், கோனேரிராஜபுரத்தைச் சேர்ந்த வன்கொடுமையால் இறந்த தெட்சிணாமூர்த்தியின் வாரிசுதாரர்கள் 4 நபர்களுக்கு தலா ரூ.2,06,375 என மொத்தம் ரூ.8,22,500க்கான காசோலைகளையும், பட்டுக்கோட்டை வட்டம், செண்டங்காடு கிழக்கை சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்கு தலா ரூ.25,000மும், 1 குடும்பத்திற்கு ரூ.24,500ம், மேலும் 2 குடும்பததிற்கு ரூ.50,000ம் என மொத்தம் 2,24,500க்கான காசோலைகளை தீருதவித் தொகையாகவும் கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்.அதனை தொடர்ந்து மாநில அளவில் 2015-2016 ஆம் கல்வியாண்டில் மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் மாவட்டம், அகரப்பேட்டை அரசுஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி பயின்ற ஏ.அந்தோணி பிரபாகரன் என்ற மாணவர் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளதை பாராட்டி ரூ.20,000த்திற்கான காசோலை மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழினை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரவணன், தாட்கோ மேலாளர் தியாகராஜன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago