முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 36 பேரில் 18 பேர்களை இலங்கை அரசு நேற்றுவிடுத்தது. அவர்கள் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழக கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்து ராமேஸ்வரம்,நாகை மற்றும் புதுகோட்டையை சேர்ந்த மீனவர்களை கடந்த மாதம் 21-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை 36 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இழுத்துச்சென்று இலங்கை சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்கக்கோரி தமிழு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமுறை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

இதனையொட்டி அந்த 36 பேர்களில் 18 பேரை இலங்கை அரசு விடுவித்தது. அந்த 18 பேர்களையும் இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினரிடம் நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் ஒப்படைத்தனர். இதை இந்திய கியூபிராஞ்ச் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் குலங்கைநாதன் ஆகியோர் தெரிவித்தனர். அவர்கள் அங்கிருந்து காரைக்கால் புறப்பட்டு நேற்றுமாலை அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பினர்.

கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டியிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரையும் அதற்கு அடுத்த நாள் தமிழக கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்த ராமேஸ்வரம் மற்றும் நாகை மீனவர்கள் 16 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச்சென்றனர். மேலும் கடந்த மார்ச் 26-ம் தமிழக கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டியிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்று சிறையில் அடைத்தனர். சிறைபிடிக்கப்பட  அவர்களில் 18 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்