முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை மாவட்டத்தில் 18 ஏரிகள் குடிமராமத்து பணிக்காக ரூ. 1.33 கோடி ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஏரிகள் குடிமராமத்து பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 1.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நிதி மற்றும் பணியாளர்கள் நிர்வாக சீர்த்திருத்தத்துறை யின் மூலம் சட்டசபை பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்ட அரசாணையின்படி பொதுப்பணித்துறையின்மூலம் குடி மராமத்து பணிகள் - நீர் பயனீட்டாளர்கள் பங்களிப்பு வழியாக நீர்பாசன ஆதாரங்கள் சீரமைத்ததிட்டத்தின்கீழ் 2016-17ஆம் ஆண்டில் முதல் வழிகாட்டு திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டு மொத்தம் மதிப்பீடுகள் தொகையாக ரூ. 100 கோடி நடப்பு நிதியாண்டிற்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் : திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டத்தில் கொழுந்தம்பட்டு, மேல்கரிப்பூர், கீழ்வணக்கம்பாடி, ராதாபுரம், எடுத்தனூர், அல்லப்பனூர், சதகுப்பம், மழுவம்பட்டு, சேர்ப்பாப்பட்டு, குங்குலிநத்தம், தென்கரும்பலூர், கொட்டையூர், வாணாபுரம், செங்கம் வட்டத்தில் மேல்செங்கம், சி.சொர்ப்பனந்தல், மேல்பென்னாத்தூர், மேல்வணக்கம்பாடி பீமானந்தல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள் குடிமரத்து பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் இதற்காக ரூ. 1.33 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட செயல் திட்டப்பணிகள் தற்போது ந¬பெற்றது வருகிறது. ஆரம்ப கட்டமாக தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொழுந்தம்பட்டு ஏரியில் சிறுசிறுமுட்செடிகள் அகற்றப்பட்டும், ஏரியின் கரையினை அதன் நீரியயல் விவரததின்படி தரப்படுத்தப்பட்டுள்ளதையும், வரத்துக் கால்வாயில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ள குடிமராமத்து பணி முடிவடைந்துள்ளது இதனை நேற்று (செவ்வாய்கிழமை) திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் செய்தியாளர்கள் குழுவினர் நேரில் பார்வையிட்டனர். மேலும் ஏரிகள் சீரமைப்பு பணி கள் யாவும் ஏரியின் நீர் பயனீடாளர்களான ஆயக்கட்டுதாரர்கள் மூலம் நியமனத்தின் அடிப்படையில் மேற்கொள்ள அரசு வழிவகை செய்துள்ளதையும் கேட்டறிந்தனர். இந்த திட்டத்தின்மூலம் எடுக்த்துக்கொள்ளபபடடுள்ள 18 ஏரிகளின் வாயிலாக மொத்தம் 830.40 ஹெக்டேர நிலம் பாசனப் பயன்பெறவள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்