முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 38 மீனவர்கள் நாகை வந்தனர் : கலெக்டர் பழனிசாமி வரவேற்றார்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் இருந்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு போர்கால அடிப்படையில் முயற்சி மேற்கொண்டதன் பயனாக, 38 மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுவித்தது.

 

 

38 மீனவர்கள்

 

தங்கச்சிமடம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சார்ந்த 38 மீனவர்கள், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இந்த 38 மீனவர்களையும் மீட்க தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த 38 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, இலங்கை-இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படடனர். இன்று (04.04.2017) மாலை 5 மணிக்கு கடலோர காவல் படையைச் சேர்ந்த ஆயு~; என்ற கப்பல் மூலம் காரைக்கால் துறைமுகம் வந்திறங்கிய தங்கச்சிமடம்-18, ஜெகதாப்பட்டினம்-14, கோட்டைப்பட்டினம்-06 பகுதிகளைச் சேர்ந்த 38 மீனவர்களை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, வரவேற்று, உணவு மற்றும் புதிய உடைகள், பிஸ்கட், குடிநீர் வழங்கி அரசின் செலவிலேயே சொந்த ஊருக்கு நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், செய்தி மக்கள் தொடர்புஅலுவலர் மீ.செல்வகுமார், மீனவ பஞ்;சாயத்தார்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்