முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே மாதம் 8 ந்தேதி அழகர் கோவிலிலிருந்து தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடு

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

அழகர்கோவில்,--மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்திபெற்றது சித்திரை பெருந்திருவிழாவாகும். இந்த விழாவானது மதுரை வைகைநதியில் மண்டூக மகரிசிக்கு சாப விமோசனம் தருவதற்காகவும், சுந்தரதோளுடையான் ஆண்டாள் மங்ளாசனம்,செய்த சுந்தரதோள்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆண்டாள் சாற்றிக்கொண்ட திருமாலையை ஏற்றுக்கொள்ளும் பொருட்டும்,சுந்தரராஜாபெருமாள், கள்ளழகர் திருக்கோலத்துடன் மதுரையம்பதிக்கு செல்லும் நிகழ்ச்சியே சித்திரைபெருந்திருவிழாவாகும்.

 இந்த திருவிழா வருகிற 26&ந்தேதி காலையில் மதுரை தல்லாகுளத்திலும், மாலையில் வண்டியூரிலும் கொட்டகைமுகூர்த்தத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து மே மாதம் 6--&ந்தேதி சனிக்கிழமையன்று அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. 7&ந்தேதி ஞாயிற்றுகிழமையும் கோவிலிலேயே சுவாமி புறப்பாடு நடைபெறும். பின்னர் 8&ந்தேதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்குமேல் 7,45 மணிக்குள் கொண்டப்பநாயக்கர் மண்டபத்திலிருந்து கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழியாகி மதுரையை நோக்கி புறப்படுகிறார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து அழகரை வணங்கி வழியனுப்பிவைக்கின்றனர். வழியில் உள்ள பொய்கைகரைப்பட்டி, கள்ளந்தரி, அப்பன்திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் எழுந்தருளி சுவாமி பக்தர்களுக்கு  அருள்பாலிப்பார்.9&ந்தேதி செவ்வாய்கிழமையன்று அதிகாலையில் மூன்றுமாவடி,புது£ர் பகுதிகளில் பக்தர்கள் எதிர்சேவை செய்து அழகரை வரவேற்பார்கள். அன்று இரவு தல்லாகுளம் பிரசன்னவெங்கடாசலபதி கோவிலில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார். பின்னர் அங்கு ஸ்ரீவில்லிபுத்து£ர் சூடிகொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை சாத்துபடிசெய்து குதிரை வாகனத்தில் அழகர் பக்தர்களுக்கு சேவைசாதித்தல் நடைபெறும்.

 திருவிழாவின் முக்கியநிகழ்ச்சியாக 10&ந்தேதி புதன்கிழமையன்று காலை 6.15 மணிக்குமேல் 7 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழர் வைகை ஆற்றில்  எழுந்தருள்கிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல், அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகபெருமாள் கோவிலுக்கு போய் இரவு அங்கு எழுந்தருள்கிறார். 11&ந்தேதி வியாழக்கிழமை அந்த கோவிலிலிருந்து  சே-ஷ வாகனத்தில் கள்ளழகர்  புறப்படுகிறார். பின்னர் கெருட வாகனத்தில் மண்டுக மகரிசிக்கு சாபவிமோசனம் தந்தருள்கிறார். அன்று இரவு விடியவிடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறும். 12&ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில்  மோகனவதாரத்திலும் பிற்பகல் ராஜாங்க திருக்கோலத்திலும், கள்ளழகர் அனந்தராய பல்லக்கில் காட்சிதருவார். அன்று இரவு பூப்பல்லக்கு திருவிழா நடைபெறும்.13&ந்தேதி சனிக்கிழமை அதிகாலை தல்லாகுளம் கருப்பணசுவாமி கோவிலிலிருந்து பிரியாவிடைபெற்று கள்ளழகர் வழிநடையாக  திருமலைநோக்கி செல்லுகிறார். அன்று இரவு மறவர் மண்டபம், அப்பன்திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் சுவாமி எழுந்தருளி காட்சிதருவார். 14&ந்தேதி ஞாயிற்றுக்கிழமை  காலையில் கள்ளழகர், அழகர் கோவில் சென்று இருப்பிடம் சேருகிறார். இத்துடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி செ.மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள்,திருக்கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்