முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் கோடைவெயிலை தாங்க மோர்பந்தல்: அதிமுகஅம்மா கட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு.

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      தூத்துக்குடி

கோவில்பட்டியில் அதிமுக அம்மாகட்சியின் பெருநகரகழகம் சார்பில் அண்ணாபேரூந்துநிலைய வளாகத்தில் பெருநகரசெயலாளர் எஸ். விஜயபாண்டியன் ஏற்பாட்டின்பேரில் பொதுமக்களுக்கு கோடைதாகத்தை தீர்க்கும் வகையில் தண்ணீர்பந்தல் அமைக்கபட்டது. அமைச்சர் கடம்பூர்ராஜீ தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு, நீர், மோர், தர்பூசணிபழம், ரோஸ்மில்க், இளநீர், ஆகியவை வழங்கினார். தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர் சங்க தலைவர் மாணிக்கராஜா, மாவட்டசெயலாளர் செல்லபாண்டியன், ஒன்றியசெயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஆனால் பெயரளவுக்கு திறந்து வைக்காமல் தொடர்ந்து மோர், தண்ணீர், இளநீர், ரோஸ்மில்க், என பொதுமக்ளுக்கு கட்சியினர் தினமும் வழங்கி வருகின்றனர். கட்சி பொருப்பாளர்கள் பலர் சென்னைக்கு தேர்தல் பணியாக சென்றாலும், தொண்டர்கள் டிரைவர்செல்லையா, விஜயராஜ், புங்கராஜ், மகளிரணியினர், உட்பட பலர் தினமும் வழங்கி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். நேற்று கோவில்பட்டி பஸ்ஸ்டாண்டடில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி கம்யூஸ்ட்கட்சி சார்பில் பஸ்ஸடாண்ட முன்பு போராட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட தோழர்கள் கூட கலைந்து செல்லும் போது மோர் சாப்பிட்டு விட்டு அதிமுக அம்மா கட்சியினரை மனதார வாழ்த்தி சென்றார்கள். இதுகுறித்து வெள்ளாளங்கோட்டை எனும் ஊரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் கூறும்போது "தாகத்துக்கு தண்ணீர் தருவது நமது கலாச்சாரம். இப்பல்லாம் கடைகாரங்க தண்ணிர் தர மாட்டேங்கிறாங்க. காரணம் இருபது ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்க சொல்றாங்க ஆனா, கோவில்பட்டி பஸ்டாண்ட்ல தினமும் வாய்க்கு ரூசியா மோர், ரோஸ்மில்க், இளநீர் எல்லாம் கட்சிபாகுபாடு பாக்காம தர்றாங்க. அந்தம்மா ஜெயலலிதா மகராசி தொடங்கி வைச்ச அந்ந திட்டத்த இப்ப அம்மாகட்சிகாரங்க தொடர்ந்து செஞ்சிவர்றது மனசுக்கு சந்தோசமா இருக்;கு என்றார்". இதே போல் பொதுமக்கள் பலரும் பாராட்டி செல்கிறார்கள்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்